Pages

  • RSS

Sunday, 14 August 2011

If you want to Redirect your site

<!-- Meta Refresh Tag --><meta http-equiv="refresh" content="0;url=http://yoursite.com/"/>

Saturday, 13 August 2011

20 குழந்தைகளின் ‘அம்மா’ ஹன்ஸிகா!


திருமணம் ஆகாமலே 20 குழந்தைகளுக்கு அன்பான ‘அம்மா’வாக மாறியிருக்கிறார் இளம் நடிகை ஹன்ஸிகா மோத்வானி.
இருங்க இருங்க… ஏதும் வில்லங்கமா கற்பனை பண்ணிக்காதீங்க… 20 குழந்தைகளை தத்தெடுத்து, அவர்களுக்கு தாயாக மாறியுள்ளார் ஹன்ஸிகா.
தமிழ் சினிமாவில் இப்போது அதிக படங்களை கைவசம் வைத்துள்ளவர் ஹன்ஸிகா. அடுத்து இவர் நடித்த வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி படங்கள் வெளியாக உள்ளன. இந்தப் படங்கள் வெளியான பிறகு இன்னும் பிஸியாகிவிடுவார் ஹன்ஸிகா என்கிறார்கள்.
இத்தனை பரபரப்புக்கு நடுவிலும் மும்பையில் 19 ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்திருந்தார் ஹன்ஸிகா. இப்போது 20வது குழந்தையை தத்தெடுத்துள்ளார்.
இவர்களுக்கு வெறும் பண உதவி மட்டும் செய்யாமல், படப்பிடிப்பு தவிர்த்த மற்ற நேரங்களில் இந்தக் குழந்தைகளை பீச், பார்க், சினிமா என வெளியில் அழைத்துப் போய் தேவையானதை வாங்கிக் கொடுத்து சந்தோஷப்படுத்துகிறாராம்.
இதுகுறித்துக் கேட்டபோது, இந்தக் குழந்தைகளை ஒரு தாயைப் போலவே பார்த்துக் கொள்ள விரும்புவதாக ஹன்ஸிகா கூறினார்.
ஹன்ஸிகா இப்போதுதான் 20 வயதில் அடியெடுத்து வைக்கிறார். தனது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில்தான் இந்த 20வது தத்தெடுப்பைச் செய்ததாக அவர் கூறியுள்ளார்.
நல்ல விஷயம். பிறந்த நாளை இப்படியும் கொண்டாடலாம்!

மங்காத்தா படத்துக்காக சொந்தக் குரலில் பேசினார் நடிகை த்ரிஷா.


அஜீத், திரிஷா ஜோடியாக நடித்த மங்காத்தா படம் அடுத்த மாதம் ரிலீசாகிறது. பாடல்கள் நாளை ஆகஸ்ட் 10-ம் தேதி ரேடியோ மிர்ச்சியில் வெளியாகின்றன.
இந்தப் படத்துக்கு டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது. திரிஷா இதில் சொந்தக்குரலிலேயே டப்பிங் பேசி உள்ளார்.
இதுகுறித்து மங்காத்தா பட இயக்குனர் வெங்கட்பிரபு கூறுகையில், “மங்காத்தா படத்தில் திரிஷாவுக்கு மிக முக்கியமான கேரக்டர். அஜீத்-திரிஷா காதல் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. இதில் திரிஷாவே சொந்த குரலில் டப்பிங் பேசியுள்ளார்.
அந்தப் பாத்திரத்துக்கு அவர் குரலே பொருத்தமாக இருக்கும் என்று உணர்ந்து நான்தான் டப்பிங் பேச வற்புறுத்தினேன். திரிஷாவும் சம்மதித்தார். நன்றாக பேசி உள்ளார். விரைவில் படம் வெள்ளித்திரையில், உங்கள் பார்வைக்கு வருகிறது,” என்றார்.
ஒரிரு படங்கள் தவிர, மீதிப் படங்களில் த்ரிஷாவுக்கு டப்பிங் வேறு கலைஞர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

எந்த உணவில் எவ்வளவு கலோரி உள்ளது




நாம் பலவிதமான உணவுகளை உட்கொள்கிறோம். சாதாரண பிஸ்கெட்டில் இருந்து பிரியாணி வரை சுவை சுவையாய்.. வகை வகையாய் சாப்பிடுகிறோம். ஆனால் நாம் உட்கொள்ளும் உணவில் இருந்து நமக்கு எவ்வளவு கலோரி சக்தி கிடைக்கிறது என நமக்குத் தெரியுமா?

பொதுவாக நாம் உட்கொள்ளும் சில உணவுப் பொருட்களில் அடங்கியுள்ள கலோரிகள் விவரம்:

பால் பொருட்கள்:

பால் ஒரு கப்  (225 மிலி) 150 கலோரி
வெண்ணெய் 1 டீ ஸ்பூன்  150
நெய் 1 டீ ஸ்பூன்  45

பழங்கள்:

ஆப்பிள் (சிறியது)  5060
வாழைப்பழம் (நடுத்தரம்)  100120
திராட்சை பழங்கள் (சிறியது) 155060
மாம்பழம் (சிறியது)  100120
ஆரஞ்சு (நடுத்தரம்)  5060

சமைத்த பண்டங்கள்:

அரிசி 25 கிராம்  80
சப்பாத்தி 1க்கு  80
காய்கறிகள் 150 கிராம்  80
வெஜிடபிள் பிரியாணி ஒரு கப்  200

அசைவ உணவுகள்:

மீன் 50 கிராம்  55
இறைச்சி  75
முட்டை  75
மட்டன் பிரியாணி ஒரு கப்  225
கோழிக்கறி 100 கிராம்  225

மற்ற பண்டங்கள்:

இனிப்பு பிஸ்கட் 15 கிராம்  70
கேக் 50 கிராம்  135
கேரட் அல்வா 45 கிராம்  165
ஜிலேபி 20 கிராம்  100
ரசகுல்லா  140

பொதுவாக ஒரு மனிதன் இயங்குவதற்கு அவரது உடல் அமைப்பு, செய்யும் வேலையைப் பொறுத்து 4000 முதல் 7000 கலோரிகள் வரை தேவைப்படலாம் என மருத்துவர்கள் கூறுகின்

எந்திரனின் உல்டாவா ஷாருக்கின் ரா ஒன் திரைப்படம்!



தமிழ் சினிமா வரலாற்றிலயே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம் "எந்திரன்", சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இயக்குனர் ஷங்கர் இயக்கி வெளிவந்த எந்திரன் திரைப்படம் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக பேசப்பட்டது.

எந்திரன் திரைக்கு வந்து இப்போது ஒரு வருடங்கள் ஆகப்போகின்றது, இப்போது
இயக்குனர் ஷங்கர் எந்திரனை தொடங்குவதற்கு முன்பி ஷாருக்கிடம் கதை சொல்லி படம் தொடங்கபடாமலியே கைவிடப்பட்டது.
பாலிவுட் ட்டில் ஷாருக்கானின் ரா-ஒன் திரைப்படத்துக்கான டிரைலர் காட்சிகள் வெளிவந்துள்ளன இந்த டிரைலர் காட்சியை பார்க்கும்போது எந்திரனின் படசாயலை அப்படியே ஒத்து உள்ளன...       

ரா ஒன் திரைப்படத்தை தயாரிக்கும் ஈராஸ் நிறுவனம் தான் முதலில் எந்திரனை தயாரிக்கவிருந்தது,ஆனால் இடையில் என்ன நடந்ததோ சன் பிச்டுறேஸ் படத்தை தயாரித்தது...

ஆனால் ஒன்று மட்டும் உண்மை இந்த இரண்டு படங்களில் எது அசல் என்பது ஒருவருக்கு மட்டுமே தெரியும்.

         

குழந்தைகளுக்கு இருதய அறுவைச்

பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இருதய அறுவைச் சிகிச்சை வேண்டின் அதனை இலவசமாகப் பெற ஸ்ரீ வள்ளி பாபா இன்ஸ்டியூட் பெங்களூர் நிறுவனம் உதவி செய்கின்றது. மேலும் விபரங்கள் பெற 9916737471

க ண்தானம்


கண் வங்கி,க ண்தானம் குறித்து தகவல்களை அறிந்து கொள்ள சங்கர நேந்த்ராலயா கண் வங்கியின் சிறப்புத் தொடர்பு எண்களையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப் படும் சமயம் நிச்சயமாக உதவும். 044 28281919 மற்றும் 044 282271616 மேலதிக விபரங்களுக்கும் எப்படி கண் தானம் செய்வது குறித்த தகவல்களுக்கும். http://ruraleye.org/
்

வாகனம் ஓட்டும் உரிமை

வாகனம் ஓட்டும் உரிமை அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட், வங்கிக் கணக்குப் புத்தகம்... போன்ற முக்கிய ஆவணங்கள் ஏதேனும் கீழே கண்டெடுத்தால் அருகில் உள்ள அஞ்சற்பெட்டியில் இட்டுவிடுங்கள். அது தானாக உரியவரிடம் சேர்ந்து விடும். அதற்குரிய அஞ்சற்செலவுத் தொகையை சம்பந்தப் பட்ட நபரிடமிருந்து அஞ்சலகங்கள் பெற்றுக் கொள்ளும்.

பிறக்கும் போதே வாய், காது , மூக்கு

தீ விபத்துக்களினாலோ அல்லது பிறக்கும் போதே வாய், காது , மூக்கு போன்ற உறுப்புக்களின் வளர்ச்சி குறைந்த நிலையில் இருந்தாலோ இலவசமாக ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ள முடியும். வரும் மார்ச் மாதம் 23 ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 4ம் தேதி வரை ஜெர்மானிய மருத்துவர்கள் PASAM Hospital , Kodaikanal மருத்துவமனைக்கு வரவிருக்கின்றார்கள். மேலும் தகவல்களைப் பெற 045420 240668,245732 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம

மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச கல்வி

மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச கல்வி, இலவச விடுதி குறித்து தகவலைப் பெற‌ 9842062501 & 9894067506 என்ற எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்

நேர்முகத் தேர்வில் எளிதாக கலந்து கொள்ள

 பொறியியல் கல்வி படித்த மாணவர்கள் தங்களின் கல்வி விபரம் குறித்து http://www.campuscouncil.com/ என்ற தளத்தில் பதிந்து வைப்போமானால் குறிப்பிட்ட நாற்பது நிறுவனங்கள் நடத்தும் நேர்முகத் தேர்வில் எளிதாக கலந்து கொள்ள முடியும்.

இரத்த வகையைத் தேடி அலைய முற்படும்


குறிப்பிட்ட இரத்த வகையைத் தேடி அலைய முற்படும் போது என்ற இணையத்தில் தேடினால் ஆயிரமாயிரம் இரத்ததானம் அளிப்பவர்களின் முகவரிகள் நமக்குக் கிட்டும் அல்லது
http://avargal-unmaigal.blogspot.com/2011/02/blog-post_05.html பார்க்கவும்.

எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து

 தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக் கண்டால் உடனே "RED Society" யின் 9940217816 என்ற எண்ணில் அழையுங்கள். அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள். 

Friday, 12 August 2011

நம் பூமியின் வெப்ப நிலை கூடுதலாக

 அடுத்த 10 மாதங்களில் நம் பூமியின் வெப்ப நிலை கூடுதலாக 10டிகிரி உயர்ந்து இப்போதிருக்கும் வெப்பத்தை விட அதிகமான வெப்பம் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள். நமது இமயமலையில் உள்ள பனிப் பாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உருக ஆரம்பித்து விட்டனவாம். ஆகையினால் நாம் புவி வெப்ப மயமாதலை எதிர்த்துப் போராட வேண்டிய தருணத்திலிருக்கின்றோம் என்பது நாமறிந்த செய்தியே!


அதனால் நம்மால் முடிந்த வரை மரங்களை நட்டு அதனைப் பேணிக் காக்கலாம் **நீரினையும், இன்ன பிற சக்திகளையும் (மின்சாரம் உள்பட) தேவையில்லாமல் செலவழிப்பதை நிறுத்திக் கொள்ளலாம்
**ப்ளாஸ்டிகை பயன்படுத்தாமலும் அவற்றின் கழிவுகளை எரித்து நாசம் செய்யாமலும் இருக்க முயற்சிக்கலாம்.


 இப்போதிருக்கும் மனித இனம் ஆறு மாத காலங்களுக்கு சுவாசிக்கத் தேவையான பிராண வாயு தயாரிக்க 38 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இத்தனை சிரமம் இல்லாமல் நமக்காக பிராண வாயு அளிக்கும் மரங்களை நட்டு அவற்றிற்கும் மரியாதை செய்வோமே!!

தமிழ் தளங்களை அனைத்து கைத்தொழைபேசிகளிலும் தெளிவாக வாசிக்க!



யுனிக்கோட் சப்போர்ட் பண்ணாத பிரச்சனையால் பலரால் தமது கைத்தொழை பேசிகளில் இணைய வசதிகள் இருந்தும் "தமிழ்" தளங்களை பார்வையிட முடிவதில்லை.
அவர்களின் பிரச்சனைக்கு ஒரு சிறிய தீர்வாக இந்த பதிவை இடுகிறேன்.
-----------------------------------------------------------------------------------
1) முதலில் கைத்தொலை பேசியில் "miniOpera(மினி ஒபேரா" இணைய உலாவியை நிறுவிக்கொள்ள வேண்டும்.
அது சாதாரணமாக இணைய வசதி உள்ள அனைத்து கைத்தொலைபேசியின் அடிப்படை உலாவியின் உதவியுடனேயே.. தேடி நிறுவ முடியும்.
அல்லது...
இந்த லிங்கிற்கு சென்று தரவிறக்கி இன்ஸ்ரோல் பண்ணிக்கொள்ளவும்.

2) இன்ஸ்ரோல் பண்ணிய பின்னர்...
கைத்தொலை பேசியில் ஒபேரா உலாவியை (Opera browser)  இயக்கிக்கொள்ளவும்.

3) பின்னர், சேர்ச் பாரில்...
"about:config" என்ட டைப் செய்து என்டர் / சேர்ச் பண்ணவும்...
அது "Power-User Settings" பக்கத்திற்கு செல்லும்.

4) அங்கே... "Use bitmap fonts for complex scripts"ஐ தெரிவு செய்து "No" இற்கு பதிலாக "Yes" ஐ மாற்றவும்.
பின்னர கீழே இருக்கும் "Save" ஐ அழுத்தி பதிந்து கொள்ளவும்.


இனி உங்களால், தமிழ் எழுத்துக்களை பார்வையிட முடியும். :)
( கச்சிதமானதாக இல்லாவிடினும்... வாசிக்க கூடியவகையுல் அமைந்திருக்கும். :)
)