<!-- Meta Refresh Tag --><meta http-equiv="refresh" content="0;url=http://yoursite.com/"/>
Sunday, 14 August 2011
Saturday, 13 August 2011
20 குழந்தைகளின் ‘அம்மா’ ஹன்ஸிகா!
திருமணம் ஆகாமலே 20 குழந்தைகளுக்கு அன்பான ‘அம்மா’வாக மாறியிருக்கிறார் இளம் நடிகை ஹன்ஸிகா மோத்வானி.
இருங்க இருங்க… ஏதும் வில்லங்கமா கற்பனை பண்ணிக்காதீங்க… 20 குழந்தைகளை தத்தெடுத்து, அவர்களுக்கு தாயாக மாறியுள்ளார் ஹன்ஸிகா.
தமிழ் சினிமாவில் இப்போது அதிக படங்களை கைவசம் வைத்துள்ளவர் ஹன்ஸிகா. அடுத்து இவர் நடித்த வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி படங்கள் வெளியாக உள்ளன. இந்தப் படங்கள் வெளியான பிறகு இன்னும் பிஸியாகிவிடுவார் ஹன்ஸிகா என்கிறார்கள்.
இத்தனை பரபரப்புக்கு நடுவிலும் மும்பையில் 19 ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்திருந்தார் ஹன்ஸிகா. இப்போது 20வது குழந்தையை தத்தெடுத்துள்ளார்.
இவர்களுக்கு வெறும் பண உதவி மட்டும் செய்யாமல், படப்பிடிப்பு தவிர்த்த மற்ற நேரங்களில் இந்தக் குழந்தைகளை பீச், பார்க், சினிமா என வெளியில் அழைத்துப் போய் தேவையானதை வாங்கிக் கொடுத்து சந்தோஷப்படுத்துகிறாராம்.
இதுகுறித்துக் கேட்டபோது, இந்தக் குழந்தைகளை ஒரு தாயைப் போலவே பார்த்துக் கொள்ள விரும்புவதாக ஹன்ஸிகா கூறினார்.
ஹன்ஸிகா இப்போதுதான் 20 வயதில் அடியெடுத்து வைக்கிறார். தனது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில்தான் இந்த 20வது தத்தெடுப்பைச் செய்ததாக அவர் கூறியுள்ளார்.
நல்ல விஷயம். பிறந்த நாளை இப்படியும் கொண்டாடலாம்!
மங்காத்தா படத்துக்காக சொந்தக் குரலில் பேசினார் நடிகை த்ரிஷா.
இந்தப் படத்துக்கு டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது. திரிஷா இதில் சொந்தக்குரலிலேயே டப்பிங் பேசி உள்ளார்.
இதுகுறித்து மங்காத்தா பட இயக்குனர் வெங்கட்பிரபு கூறுகையில், “மங்காத்தா படத்தில் திரிஷாவுக்கு மிக முக்கியமான கேரக்டர். அஜீத்-திரிஷா காதல் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. இதில் திரிஷாவே சொந்த குரலில் டப்பிங் பேசியுள்ளார்.
அந்தப் பாத்திரத்துக்கு அவர் குரலே பொருத்தமாக இருக்கும் என்று உணர்ந்து நான்தான் டப்பிங் பேச வற்புறுத்தினேன். திரிஷாவும் சம்மதித்தார். நன்றாக பேசி உள்ளார். விரைவில் படம் வெள்ளித்திரையில், உங்கள் பார்வைக்கு வருகிறது,” என்றார்.
ஒரிரு படங்கள் தவிர, மீதிப் படங்களில் த்ரிஷாவுக்கு டப்பிங் வேறு கலைஞர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
எந்த உணவில் எவ்வளவு கலோரி உள்ளது
நாம் பலவிதமான உணவுகளை உட்கொள்கிறோம். சாதாரண பிஸ்கெட்டில் இருந்து பிரியாணி வரை சுவை சுவையாய்.. வகை வகையாய் சாப்பிடுகிறோம். ஆனால் நாம் உட்கொள்ளும் உணவில் இருந்து நமக்கு எவ்வளவு கலோரி சக்தி கிடைக்கிறது என நமக்குத் தெரியுமா?
பொதுவாக நாம் உட்கொள்ளும் சில உணவுப் பொருட்களில் அடங்கியுள்ள கலோரிகள் விவரம்:
பால் பொருட்கள்:
பால் ஒரு கப் (225 மிலி) 150 கலோரி
வெண்ணெய் 1 டீ ஸ்பூன் 150
நெய் 1 டீ ஸ்பூன் 45
பழங்கள்:
ஆப்பிள் (சிறியது) 5060
வாழைப்பழம் (நடுத்தரம்) 100120
திராட்சை பழங்கள் (சிறியது) 155060
மாம்பழம் (சிறியது) 100120
ஆரஞ்சு (நடுத்தரம்) 5060
சமைத்த பண்டங்கள்:
அரிசி 25 கிராம் 80
சப்பாத்தி 1க்கு 80
காய்கறிகள் 150 கிராம் 80
வெஜிடபிள் பிரியாணி ஒரு கப் 200
அசைவ உணவுகள்:
மீன் 50 கிராம் 55
இறைச்சி 75
முட்டை 75
மட்டன் பிரியாணி ஒரு கப் 225
கோழிக்கறி 100 கிராம் 225
மற்ற பண்டங்கள்:
இனிப்பு பிஸ்கட் 15 கிராம் 70
கேக் 50 கிராம் 135
கேரட் அல்வா 45 கிராம் 165
ஜிலேபி 20 கிராம் 100
ரசகுல்லா 140
பொதுவாக ஒரு மனிதன் இயங்குவதற்கு அவரது உடல் அமைப்பு, செய்யும் வேலையைப் பொறுத்து 4000 முதல் 7000 கலோரிகள் வரை தேவைப்படலாம் என மருத்துவர்கள் கூறுகின்
எந்திரனின் உல்டாவா ஷாருக்கின் ரா ஒன் திரைப்படம்!

தமிழ் சினிமா வரலாற்றிலயே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம் "எந்திரன்", சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இயக்குனர் ஷங்கர் இயக்கி வெளிவந்த எந்திரன் திரைப்படம் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக பேசப்பட்டது.
எந்திரன் திரைக்கு வந்து இப்போது ஒரு வருடங்கள் ஆகப்போகின்றது, இப்போது
இயக்குனர் ஷங்கர் எந்திரனை தொடங்குவதற்கு முன்பி ஷாருக்கிடம் கதை சொல்லி படம் தொடங்கபடாமலியே கைவிடப்பட்டது.பாலிவுட் ட்டில் ஷாருக்கானின் ரா-ஒன் திரைப்படத்துக்கான டிரைலர் காட்சிகள் வெளிவந்துள்ளன இந்த டிரைலர் காட்சியை பார்க்கும்போது எந்திரனின் படசாயலை அப்படியே ஒத்து உள்ளன...
ரா ஒன் திரைப்படத்தை தயாரிக்கும் ஈராஸ் நிறுவனம் தான் முதலில் எந்திரனை தயாரிக்கவிருந்தது,ஆனால் இடையில் என்ன நடந்ததோ சன் பிச்டுறேஸ் படத்தை தயாரித்தது...
ஆனால் ஒன்று மட்டும் உண்மை இந்த இரண்டு படங்களில் எது அசல் என்பது ஒருவருக்கு மட்டுமே தெரியும்.
குழந்தைகளுக்கு இருதய அறுவைச்
பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இருதய அறுவைச் சிகிச்சை வேண்டின் அதனை இலவசமாகப் பெற ஸ்ரீ வள்ளி பாபா இன்ஸ்டியூட் பெங்களூர் நிறுவனம் உதவி செய்கின்றது. மேலும் விபரங்கள் பெற 9916737471
க ண்தானம்
கண் வங்கி,க ண்தானம் குறித்து தகவல்களை அறிந்து கொள்ள சங்கர நேந்த்ராலயா கண் வங்கியின் சிறப்புத் தொடர்பு எண்களையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப் படும் சமயம் நிச்சயமாக உதவும். 044 28281919 மற்றும் 044 282271616 மேலதிக விபரங்களுக்கும் எப்படி கண் தானம் செய்வது குறித்த தகவல்களுக்கும். http://ruraleye.org/
்
